Pages

Wednesday, June 4, 2014

பேய்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள்

ஆவி நடமாடும் இடங்களின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பன்கர்ஹ் கோட்டையைப் பற்றி தெரிந்திருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்கர்ஹ் என்ற புகழ்பெற்ற நகரம், இந்தியாவில் உள்ள ஆவி நடமாடும் இடங்களில் ஒன்றாகும். இந்த இடத்தைப் பற்றி பல கதைகள் உள்ளது. இங்கே தொலைந்து போனவர்களைப் பற்றி பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பிரச்சனைகளை தவிர்க்க, அந்த மாநிலத்தின் அரசாங்கம் ஒரு எச்சரிக்கை பலகையை அதன் நுழைவாயிலில் மாட்டியுள்ளது.






ராமோஜி ஃபிலிம் சிட்டி
ஹைதராபாத் இந்தியாவில் ஆவி நடமாடும் முதன்மையான இடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. காரணம் வீரர்கள் செத்து மடிந்த போர்க்களத்தில் தான் இந்த பிலிம் சிட்டி கட்டப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் உணவகங்கள் கூட அங்கே நிலவும் அமானுஷ்யத்தைப் பற்றி கூறியுள்ளார்கள்.





டுமாஸ் கடற்கரை, குஜராத்
இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தளமும் ஆவி திரிகின்ற இடமாக கருதப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும். காரணம், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பலர் இங்கே தொலைந்து போயுள்ளனர். இந்த கடற்கரையை முன்பொரு காலத்தில் மனித சடலங்களை எரிக்க இந்துக்கள் பயன்படுத்தியுள்ளனர்.





டவ் மலை, மேற்கு வங்காளம்
குர்சியாங் என்ற இடத்தில் உள்ள இந்த மலையில் உள்ள பள்ளியிலும், காட்டிலும் பேய் நடமாட்டம் இருக்கிறது என நம்பப்படுகிறது. இங்கே நடந்துள்ள பல கொலைகளும் அமானுஷ்யங்களும், இங்கே உள்ள மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.





செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பேய் வீடு
பெங்களூரு இந்தியாவில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே மர்மமான முறையில் கொலை செய்யப்பட சின்னப்பெண் மற்றும் அங்கே நடக்கும் அமானுஷ்ய செயல்கள் இந்த இடத்தைப் பற்றி பல கதைகளை கிளப்பியுள்ளன.



டெல்லி கண்டோன்மென்ட்
டெல்லி டெல்லியில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே உள்ள அடர்ந்த பச்சை பசுமையான காட்டில் பேய் நடமாட்டம் உள்ளதென்று நம்பப்படுகிறது. காரணம், அங்கே வெள்ளை நிற சேலையில் ஒரு பெண் உடன் பயணிக்க உதவி கோருவதை பலர் கண்டுள்ளனர். அப்பெண் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து உங்களை முந்தியும் செல்வாளாம்.



ஷனிவார்வாடா கோட்டை
பூனே இங்கே இரவு நேரத்தில் ஒரு பையனின் அலறல் சத்தம் கேட்குமாம். இங்கே நிலவும் கதைகளின் படி, தன் உறவினர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 13 வயது இளவரசனால், இக்கோட்டையில் பேய் நடமாட்டம் உள்ளதாம். பௌர்ணமி அன்று இங்கே பேய் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.





பெங்களூரு சர்வதேச விமான நிலையம்
விமான நிலையம் போன்ற சுறுசுறுப்பான இடத்தில் ஆவி நடமாட்டம் இருக்கும் என்றால் யாராவது நம்புவார்களா? பயணிகளும். பணியாளர்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சில அமானுஷ்ய செயல்களை கண்டுள்ளனர்.





சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்
தமிழ் நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் மற்றும் மாநிலத்தின் நான்காவது பெரிய புலிகள் சரணாலயமான இங்கேயும் ஆவி நடமாட்டம் இருக்கிறது என கூறப்படுகிறது. 2004-ல் வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு, அங்கே சில அமானுஷ்ய செயல்களும், நிகழ்வுகளும் மக்களை அச்சுறுத்தியுள்ளது. தானாக கண்ணாடி விளக்கு காற்றில் பறப்பதும், நெடுஞ்சாலையில் ஆவிகள் நடமாடுவதும், இந்த சரணாலயத்தை ஆவி நடமாடும் இடமாக மாற்றியுள்ளது.

0 comments

Post a Comment