சீனாவில் 113 வயது மூதாட்டி ஒருவர் 70 வயது முதியவரை திருமணம் செய்துள்ளார். ஜின்ஜியாங் பிராந்தியத்தில் பாச்சு கவுன்டியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் அசாத்திஹானும், அய்மதியும் கடந்த டிசம்பர் மாதம் சந்தித்து கொண்டனர்.
பின்னர் இருவரும் 6 மாதமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தனர். இப்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், தங்களது திருமண புகைப்படங்களை சீன பத்திரிகைகளுக்கு வினியோகித்தனர்.
இதுகுறித்து அசாத்ஹான் கூறுகையில், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். என்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக கவலைப்படவில்லை. சாப்பாட்டின்போது எனக்கு கறி சமைத்து போட்டு, என்னை அன்பாக கவனித்து கொள்கிறாள்.
ஒருவரை ஒருவர் கவனித்து கொள்வதில், இன்றும் நாங்கள் இளமையாக இருப்பதாக நினைக்கிறோம் என்று கூறியுள்ளார்.



0 comments
Post a Comment