Wednesday, June 4, 2014
ராணுவ வீரரை கத்தியால் குத்திய பெண் பேய்: பொலிஸ் அதிர்ச்சி
Posted by
Anonymous
at
7:38 PM
ஆற்காடு அருகே பெண் பேய் வயிற்றில் கத்தியால் குத்தியதாக ராணுவவீரர் புகார் செய்ததால் பொலிசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பொலிசார் பல விசித்திரமான கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளை பார்த்து பார்த்து பழகியவர்கள் அப்படிபட்ட வழக்குகளுக்கு எளிதில் தீர்வும் கண்டிருக்கிறார்கள்.
ஆற்காடு அடுத்த வாழபந்தல் பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஒரு புகாரால் அங்குள்ள பொலிசார் மீள முடியாத அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர்.
பேய் இருக்கா, இல்லையா என்ற கோள்விக்கே விடை தெரியாத நிலையில் பேய் வந்து தன்னை கத்தியால் குத்திவிட்டு சென்றுவிட்டது எனக் கூறப்பட்டுள்ள புகார் தான் அது.
வாழபந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 50) ஒய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி இறந்துவிட்டார். இதனால் முனிரத்தினம் தனியாக வசித்த வருகிறார். நேற்று முன்தினம் வயிற்றில் காயத்துடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது பற்றி வாழபந்தல் பொலிசில் முனிரத்தினம் புகார் செய்துள்ளார்
சம்பவத்தன்று பெண் பேய் ஒன்று நிர்வாணமாக வந்து கத்தியால் என்னை குத்த பாய்ந்தது. இறுதியில் எனது வயிற்றை கீறிவிட்டு சென்றுவிட்டது.
இதில் காயமடைந்த நான் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
புகார் மனுவை பார்த்து தலையை பிய்த்துகொண்ட பொலிசார் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
Tags :
பலதும் பத்தும்

0 comments
Post a Comment