Pages

Wednesday, June 4, 2014

குழந்தையை இப்படியும் சுமக்கலாம்: மணப்பெண்ணின் வினோத செயல்......



அமெரிக்காவில் மணப்பெண் ஒருவர் தனது ஒரு மாத குழந்தையை தன் மணப்பெண் ஆடையில் கட்டி வைத்து இழுத்து சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கவின் டென்னீஸ் மாகாணத்தை சேர்ந்த சோனா கார்டர் ப்ரூக் என்ற மணப்பெண், தன் 1 மாத பெண் குழந்தையான ஆப்ரியை, தனது ஆடையில் கட்டி இழுத்தப்படியே எலம் பெப்டஸ்ட் என்ற தேவாலயத்தில் நடைபெறும் தனது திருமணத்திற்கு நடந்து வந்துள்ளார்.

இதுகுறித்து ப்ரூக் கூறுகையில், இவ்வாறு இழுத்து சென்றதில் எந்தவித தவறும் இல்லை என்றும் நான் குழந்தையை நன்றாக கீழே விழாதபடி கட்டிவைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தையை இவ்வாறு சுமந்து வருவதற்காகவே தனது ஆடையை மாற்று வடிவம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இவரது இச்செயல் வலைத்தளங்களில் அம்பலமாகி அனைவராலும் இது ஒரு முட்டாள்தனமான செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரூக் தனது குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் நல்லாரோக்கியத்துடன் உள்ளதாக வலைத்தளங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளார்.






0 comments

Post a Comment