Pages

Tuesday, June 3, 2014

மனித சருமத்தை காப்பதட்காக தாய்ப்பால் சோப்பு !

Mother's milk soapசருமம் காக்கும் தாய்ப்பால் சோப்பு  தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு பேதி, வாந்தி, நெஞ்சு, காது தொற்றுகள், உடல்பருமன் ஏற்படுவதில்லை. குறைந்தது ஓராண்டு காலம் தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகள், பின்னாளில் தாய்ப்பாசம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் சீனாவில் புதிதாக பிறந்துள்ள ஒரு ஆண் குழந்தை தன் தாயிடம் பால் குடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. தாய்ப்பால் வீணாகக்கூடாது என கருதிய அந்தக்குழந்தையின் தாய், தாய்ப்பாலை வழக்கமான முறையில் சேகரித்து அதைக்கொண்டு ஒரு குளியல் சோப்பு தயாரித்து விட்டார்.
இந்த சோப்பினை போட்டு குளிக்க வைக்கிறபோது, குழந்தைக்கு சருமப்பகுதிகளில் வெடிப்பு உள்ளிட்ட எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இது உண்மைதான் என ஆராய்ச்சியாளர்களும் கூறி விட்டனர்.
அந்த பெண்மணி, இந்த தாய்ப்பால் குளியல் சோப்பினை பொம்மை, முயல், ஆமை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தயார் செய்து வருகிறார். இப்போது சீனாவில் இந்தத்தாய்ப்பால் சோப்பு மிகவும் பிரபலமாகி விட்டது.

0 comments

Post a Comment