யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசாரக் கொடுமைகளுக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. இவ்வாறு தாங்கள் அணிந்து வருவதால் தங்களுக்குள் தாங்களே தங்களை அழகுராணி என நினைத்து வீதியில் இறங்கும் யாழ்ப்பாணத்துக் பெண்கள் இறுதியில் நாய் துரத்தினால் கூட ஓட முடியாத நிலையில் அவஸ்த்தைப்படுகின்றனர்.
கலாசாரத்துக்குப் பெயர் போனது யாழ்ப்பாணம். இது உலகறிந்த உண்மை. அந்தக் காலத்துப் பெண்களால் சேமித்து வைக்கப்பட்ட கலாசாரத்தைத் தற்போதைய பெண்கள் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். முழங்காலுக்கு மேல் பாவாடை அணிந்து கொண்டு யாழ்ப்பாணத்தை வலம் வரும் அழகுராணிகளைப் பார்த்து எங்கள் ஆண்கள் கொட்டாவி விடுகின்றனர்.
இது இவ்வாறிருக்க, குடாநாட்டுக் கோவில்களின் மஹோற்சவங்கள் அண்மையில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான ஆயத்த வேலைகளைக் குடநாட்டுப் பொண்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
குறிப்பாக நல்லூர்த் திருவிழா என்றால் 25 நாட்கள் நடைபெறும். இந்த 25 நாட்களுக்கும் 25 விதமான புடவை ரகங்கள் குடாநாட்டுப் பெண்களால் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு விட்டன.
இனி என்ன? கொடியேறட்டும், ஒரு கலக்கு கலக்கி விடலாம் என்னும் நினைப்புடன், நகைக் கடை விளம்பரத்துக்கு வருவதுபோல் தங்க நகைகளை கழுத்து நிறைய அடுக்கி, அங்கங்கள் தெரியும் அளவுக்கு ஆடைகளை அணிந்து வரப் போகின்றனர் மேலைத்தேயக் கலாசாரத்துடன் எமது குடாநாட்டுப் பெண்கள்.
யாழ்.குடாநட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் பாலியல் கலாசாரத்துக்கு ஒட்டுமொத்தமாக ஆண்களை மட்டும் குறை கூறுவது நியாயமற்ற ஒன்று. இச் செயற்பாடுகளுக்கு பெண்கள் பங்களிப்பும் அரைக்கரைவாசி உண்டு என்பதில் சந்தேகமில்லை.
யாழ்ப்பாணத்து நவீன சந்தைப் பகுதியில் காலை அல்லது மாலை நேரங்களில் பார்த்தால் தெரியும் எமது யாழ்ப்பாணத்துக் பெண்களின் நன்னடத்தைகள். எனவே எமது குடாநாட்டின் கலாசாரத்தைக் கட்டிக் காக்க வேண்டியது தற்கால சூழ்நிலையில் இன்றியமையாததாகவுள்ளது. இது அனைவரினதும் தலையாய கடமையும் ஆகும்.




0 comments
Post a Comment