Pages

Wednesday, June 4, 2014

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் தீப்பிடிப்பா?? புதிய பரபரப்பு

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததாக இங்கிலாந்து பெண் ஒருவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி 239 பேருடன் கோலாம்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட MH370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானது.
இதையடுத்து மலேசியா, சீனா ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி கப்பலின் மூலம் கடந்த மூன்று மாத காலமாக கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தன. இந்நிலையில் மாயமான விமானம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததாக இங்கிலாந்தை சேர்ந்த கேத்ரின் டீ என்ற பெண் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நானும் என் கணவர் மார்க் ஹார்னும் விடுமுறையை கழிக்க சென்றோம். நாங்கள் கொச்சியில் இருந்து தாய்லாந்தில் உள்ள புகெட்டுக்கு படகில் சென்றோம். அப்போது இந்திய பெருங்கடலை கடந்து செல்லும்போது விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை நான் பார்த்தேன்.” என அவர் கூறியுள்ளார்.
மாயமான மலேசிய விமானம் சென்ற பாதையில் அவர்களின் படகு சென்றுள்ளதால், தீப்பிடித்து எரிந்த விமானம், மாயமான மலேசிய விமானமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.Malaseja-Felit

0 comments

Post a Comment