Google மூலம் தமிழில் எமக்குத் தேவையான தகவல்களை தேடமுடியும். தமிழில் தேடும்போது Google தேடித்தரும் இணையத்தள பட்டியலும் பெரும்பாலும் தமிழ் இணையத் தளங்களாகவே இருக்கும்.
உதாரணமாக "கண்ணதாசன்" என்ற சொல்லைக் கொடுத்து தேடிய போது வந்த பட்டியல் கீழேயுள்ள படத்தில் காட்டப் பட்டுள்ளது. இதையே "kannathasan" என்று ஆங்கிலத்தில் type செய்யும்போது, கண்ணதாசன் சம்மந்தமான தகவல்களைக் கொண்ட ஆங்கில இணையத் தளங்களின் பட்டியல் வருகிறது.

தமிழில் தேடுவதற்கு தேவையானதெல்லாம் ஒரு தமிழில் type செய்வதற்கான ஒரு மென்பொருள் (software) மட்டுமே! தமிழில் type செய்வதாற்கு உதவும் சில மென்பொருட்களின் விபரம் கதிரின் 'இணையத்தில் தமிழ்' கட்டுரையில் எற்கனவே பிரசுரமாகி உள்ளது. இது தமிழ் ஆர்வலர்களுகு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

0 comments
Post a Comment