என். டி. ராமராவ் அல்லது என். டி. ஆர். (மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தார். தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவர் 1968-ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.என்.டி.ஆர் 1947-ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.
'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார்.
1993-ல் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரி பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். அப்போது எம்.டி.ஆருக்கு 70 வயது. அதன்பின் 1994-ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார்.
சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனானா நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல்மந்தியானார்.

0 comments
Post a Comment