Pages

Wednesday, May 28, 2014

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: மே 29- 1947

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: மே 29- 1947இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் 1947-ம் அண்டு மே 29-ந்தேதி அமைக்கப்பட்டது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1727 - இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னராக முடி சூடினார். * 1780 - அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர் வீரர்கள் 113 பேரை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர். * 1790 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13-வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. * 1848 - விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30-வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. * 1864 - மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான். * 1867 - ஆஸ்திரிய- ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது. * 1869 - பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது. * 1886 - வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற்தடவையாக கொக்க கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார். * 1903 - செர்பியாவின் மன்னன் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1914 - புனித லாரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர். * 1919 - ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது. * 1947 - இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது. * 1953 - முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர். * 1972 - டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர். * 1982 - இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. * 1985 - பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தீன் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். * 1988 - அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார். * 1990 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.

* 1999 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது. * 1999 - 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர். * 2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

0 comments

Post a Comment