Pages

Saturday, May 31, 2014

தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பிள்ளைகள்


இறந்துபோன தமது தந்தையின் இறுதி ஆசையை அவரது பிள்ளைகள் தந்தையின் மரணச் சடங்கின் போது நிறை
வேற்றியுள்ளனர். மத்திய மேற்கு அமெரிக்காவின் ஓஹ்யோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி, தான் இறக்கும் போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டிருந்தவாறே புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இந்த ஆசையை தனது பிள்ளைகளிடமும் எடுத்துக் கூறியுள்ளார்.
சிறு வயது முதல் மோட்டார் சைக்கிள் என்றால் பிரியமாக இருந்தவர் பில் ஸ்டான்ட்லி. காலப்போக்கில் அதீத நாட்டம் கொண்டார். அதிவேகமாக செல்லும் மிக விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் என்ற மோட்டார் சைக்கிளை வாங்கி வீதிகளில் வேகமாக ஓட்டி வந்தார். இந்நிலையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான பில் ஸ்டான்ட்லி, சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 26ம் திகதி தனது 82வது வயதில் உயிரிழந்தார்.
இதையடுத்து தமது தந்தை தமக்கு கூறிய இறுதி ஆசையை நிறைவேற்ற மகன்மார் நிறைவேற்றுவது என முடிவு செய்தனர். அதற்காக அதிக பாரத்தை தாங்ககூடிய கண்ணாடிப் பேழையை தயார் செய்ததுடன், தாயாரின் சமாதிக்கு அருகே 3 கல்லறைகளுக்கான இடத்தை முன்பதிவு செய்தனர். உருவாக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை முழுவதையும் நறுமண தைலங்களால் நிரப்பினர். ‘ஹார்லி டேவிட்சன்’ நிறுவனம் 1967ம் ஆண்டில் தயாரித்த ‘எலெக்ட்ரா கிலைட்’ வகையான மோட்டார் சைக்கிளை குறித்த கண்ணாடி பேழைக்குள் வைத்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்ட வீரர்கள் அணிவதைப் போன்ற லெதர் ஜக்கெட், ஹெல்மெட், கூலிங் கிளாஸ் சகிதமாக தமது தந்தையை அமர்ந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் மீது வைத்து கட்டினர். இதையடுத்து நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தந்தையின் உடலை எடுத்துச் சென்று கல்லறையில் புதைத்து தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றினர்.

0 comments

Post a Comment