Pages

Saturday, May 31, 2014

கனவில் வந்த மனைவிக்காக வானில் இருந்து குதித்த வயோதிபர்


நீங்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என தனது மரணமான மனைவி வேண்டுகோள் விடுப்பது போன்று கனவு கண்ட சக்கர நாற்காலியே தஞ்சமென வாழும் 93 வயது வயோதிபர் ஒருவர், அந்த வேண்டுகோளைப் பூர்த்தி செய்யும் முகமாக 11,000 அடி உயரத்திலிருந்து பரசூட்டில் குதித்து சாதனை படைத்த சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் சஸெக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னாள் படையினரான பில்லி ஹவெஸ் என்பவரே இவ்வாறு தனது வாழ்வில் எதையாவது சாதித்தே தீருவதென முடிவெடுத்து தனது மருமகனின் உதவியுடன் 11,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து பரசூட் அணிந்து குதித்து இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

0 comments

Post a Comment