Pages

Sunday, May 25, 2014

ரகசிய கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பில்கேட்ஸ்


கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பெண்ணுக்கு பரிசுகள் வழங்கினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்காவில் ரகசிய சாண்டா (கிறிஸ்துமஸ் தாத்தா) நிகழ்ச்சியை ‘ரெட்டிட்’ என்ற இணைய தளம் நடத்தியது. அதில் பங்கேற்றவர்கள் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ரகசிய கிறிஸ்துமஸ் தாத்தா ஆக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் ரேச்சல் என்ற பெண்ணுக்கு ஒரு பசு மாடு பொம்மை, கையெழுத்து போட்ட வாழ்த்து அட்டை, ஒரு புத்தகம் போன்றவைகளை பரிசாக வழங்கினார்.
இவை தவிர ரேச்சல் பெயரில் ஹெய்பர் இண்டர் நேஷனல் அமைப்புக்கு 500 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கப்பட்டதற்கான ரசீது ஒன்றையும் பரிசாக அளித்தார். 

0 comments

Post a Comment