Pages

Sunday, May 25, 2014

அக்குறணையில் இராட்சத கொடிக்கிழங்கு - படங்கள்


அக்குறணையில் அதிசயமான ஒரு கொடிக்கிழங்கு அகழ்ந்தெ டுக்கப்பட்டுள்ளது. அக்குறணை, குருகொடை சுலைமான் கந்த வீதியை சேர்ந்த எம்.ஜே.ஏ. அமானுல்லா அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் சுமார் 300 கிலோவிற்கும் மேற்பட்ட எடையுள்ள டைநோசர் வடிவில் இராட்சத கொடிக்கிழங்கு ஒன்று நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன் இது நடப்பட்டதாகவும்; கடந்த மூன்று தினங்களாக கிழங்கை தோண்டி எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ஜனாப் அமானுல்லா அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் எடை மேலோ ட்டமான மதிப்பின் படி 300 கிலோவிற்கு அதிகமாகவே இருக்கும் எனவும் முழுமையாக வெளியே எடுத்து எடையை நிறுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments

Post a Comment