Pages

Wednesday, June 4, 2014

500 ரூபாய் பிரச்னை: பாசத்தால் ஒருவர் பின் ஒருவராக 4 பேர் தற்கொலை செய்த கொடுமை....



அன்றில் பறவைகளில் ஒன்று பிரிந்தால் இன்னொன்று தன்னை மாய்த்துக் கொள்ளும் என்று தமிழ் இலக்கியம் புகழ்ந்து பாடுவதை நாம் படித்து ரசித்திருப்போம். ஆனால் நாகை மாவட்டம் வலிவலத்தில் நடந்திருக்கும் சோகச் சித்திரம் எந்த இலக்கியத்திலும் இடம்பெறாதது.

நாகை மாவட்டம் வலிவலம் முதலியார் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். 31 ஆண்டுகளுக்கு முன்பே காதல் கலப்பு மணம் புரிந்த இவர் கம்பி பிட்டராக வேலை பார்த்து வந்த இவருக்கு இரண்டு மகன்கள்.

மூத்த மகன் செந்தில் சென்னையில் ஒரு பேன்சி ஸ்டோரிலும், இளைய மகன் சதீஷ் உள்ளூரிலிலேயே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலையும் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி விற்றதில் கிடைத்த லாபத்தில் 500 ரூபாயை குடும்பத்துக்குத் தெரியாமல் சதீஷ் செலவு செய்திருக்கிறார். இது தெரிந்த நாகராஜன் மகனை கண்டித்திருக்கிறார்.

பாசத்தோடு வளர்த்த தந்தை தன்னை திட்டிவிட்டதால் மனம் உடைந்த சதீஷ் விஷம் அருந்திவிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மகன் விஷம் குடித்தது கூட தெரியாத நிலையில்படுத்துக் கிடக்கும் நாகராஜனை எழுப்பிய போது, அவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்துள்ளார். வீட்டில் தந்தையும், மருத்துவமனையில் மகன் சதீஷும் பாசத்தின் உச்சக்கட்ட எல்லையின் அழுத்தம் தாங்காமல் இறந்தார்கள்.

இவர்களின் மறைவைத் தொடர்ந்து வீட்டில் இருந்த நாகராஜனின் மனைவி ராஜலட்சுமியும், செந்திலும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் துக்கம் தாங்காமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மகனைத் திட்டிவிட்டோமே என்கிற வருத்தத்தில் தந்தையும், தந்தை மனம் நோகும்படி செய்து விட்டோமே என்று இளைய மகனும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள, அவர்கள் இல்லாத உலகத்தில் நாம் மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்று தாயும், மூத்த மகனும் அவர்கள் வழியில் தங்களை ஒப்படைத்த இந்த பாச அர்ப்பணிப்பை என்னவென்று சொல்வது?....


0 comments

Post a Comment